Monday, June 28, 2004 |
தமிழ் குழுக்கள்... என் வலைப்பூ |
தமிழில் இன்று பல மன்றங்கள் இயங்குகின்றன். அதில் நான் அறிந்த வரை
அதிகம் பேசப்படும் ஒரு மன்றம், மன்ற மையம் என்று அழைக்கப்படும் forum hub.
அடுத்த படியாக எனக்கு பிடித்த் மன்றம் தமிழ்மன்றம்.tamilmantram.com
பின்னர் அலைகள் மன்றம் என்ற ஒரு மன்றத்தையும் பார்த்தேன். வேறு சில மன்றங்களும் உண்டு.
ஆனால் பெரும்பாலான மற்ற மன்றங்கள் வெகுசில போஸ்டிங்குகளுடன், குறைவான உறுப்பினர்களுடன்
இயங்குகின்றன.
யாஹூ குரூப்ஸ் என்று பார்த்தால் தமிழில் தான் அதிக அளவில் குரூப்கள் என்று எங்கோ படித்தேன்.
அதே போல வலைப்பூக்களிலும் கூட.. தமிழ் தான் அதிகம் ஆட்சிமொழி போல...
இங்கு ஒன்று தோன்றுகிறது. தமிழர்களிடம் குழு மனப்பான்மை என்பது குறைவு என்று எப்போதாவது எனக்குத் தோன்றுவது உண்டு. ஒருவேளை அது உண்மையோ.. அதனால் தான் அவரவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப குரூப்கள் துவங்குவதும்,
வலைப்பூ அமைப்பதிலும் பிசியாக இருக்கிறார்களோ? எது எப்படி இருந்தாலும், தமிழ் இணையத்தில் அதிகம் உலாவுவது
பார்க்க மிகவும் இனிமையாகத் தானே இருக்கிறது ! அது மறுக்க முடியாததாயிற்றே..!!
நான் ஏன் வலைப்பூ ஆரம்பித்தேன்....
இது ஒரு நல்ல கேள்வி...
வலைப்பூக்களில் பல ஜாம்பவான்களும் திறமையான எழுத்தாளர்களும், எழுதிக்கொண்டிருக்கிறார்கள்...
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், நாகூர் ரூமி, பா.ராகவன், என்.சொக்கன் போன்றோர். இன்னும் பலர்...இருக்கலாம்...ஆனால் எனக்குத் தெரியாது, சமீபகாலங்களிலாக மட்டுமே இணையத்தில் இவ்வளவு உலாவும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது... நிச்சயம் எல்லோரையும், தெரிந்து கொள்ள வேண்டும்... சுவையாகவும் சுகமாகவும் நேரம் போக வேண்டுமானால் வலைப்பூக்களை மேயலாம்..!!
சரி மீண்டும் கேள்விக்கு வருவோம்... வலைப்பூ பற்றி சில காலங்களுக்கு முன்னரே அறிந்திருந்தாலும், எழுதவேண்டும் என்ற உந்துதல் இல்லை.. திறமையாக எழுதிக்கொண்டிருக்கும் மற்ற வலைப்பதிவாளர்கள் பார்த்து நம்க்கெங்கே இப்படியெல்லாம் எழுத வரப்போகிறது என்று தோன்றியதுதான் முக்கிய காரணம்!
ஆனால், எல்லோரும் எல்லாமும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை... சும்மா தோன்றுவதை கிறுக்கித்தள்ளினால் என்ன தவறு.. வாய்ப்பிருக்கும் போது, டைரி குறிப்பு போல மனதில் எழும் எண்ணங்களை எழுதி வைத்தால், என்றேனும் நாமே திரும்பிப்பார்க்கும் போது, மனம் கனிய நேரிடலாமே!. என்ன.. யாரேனும் இதையெல்லாம் படித்தால் கிண்டல் செய்யும் வாய்ப்பிருக்கிறது..
நண்பர் முத்து, தமிழ் வலைப்பூக்கள் பட்டியலில் இதை சேர்த்து விடச்சொன்னார்... tamilblogs.blogspot.com ல் இணைத்துவிடச்சொல்லி பின்னூட்டம் கொடுத்து விட்டேன். ஆனாலும் இங்கு வருபவர்களிடம் முதலிலேயே ஒன்று சொல்லிவிட வேண்டும், இது ஒன்றும் திறமையான எழுத்துக்குறிப்புகள் இல்லை. சும்மா.. சும்மா... மட்டும்தான் என்று, எப்படி என்றுதான் தெரியவில்லை.
|
posted by சாகரன் @ 6/28/2004 05:31:00 PM |
|
2 Comments: |
-
சாகரன், அழகாய் எழுதுகிறீர்கள்.. தொடருங்கள். உங்கள் பதிவை தமிழ் வலைப்பூக்கள் பட்டியலில் சேர்த்துவிடலாமே ..
-
நன்றி முத்து... இணைக்கச் சொல்லி பின்னூட்டம் கொடுத்துவிட்டேன்.
|
|
<< Home |
|
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|
சாகரன்,
அழகாய் எழுதுகிறீர்கள்..
தொடருங்கள்.
உங்கள் பதிவை தமிழ் வலைப்பூக்கள் பட்டியலில் சேர்த்துவிடலாமே ..