சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Thursday, January 25, 2007
Why N73 is better than K800
சோனி எரிக்சன் கே. 800 ம் சரி, நோக்கியா என். 73 ம் சரி இரண்டுமே மிகச் சிறப்பான மாடல்கள். இவற்றைக் குறித்த ஒரு ஒப்பீடு.Sony Ericsson K800 Nokia N73
3.2 மெகா பிக்ஸல் சைபர்ஷாட் கேமரா வித் பிளாஷ் 3.2 மெ.பி கார்ல் சூயிஸ் லென்ஸ் கேமரா வித் பிளாஷ்
1000 போன் புக் அள்வில்லை
3G சப்போர்ட் ஆம்
ஜாவா, எப்.எம் ரேடியோ, எம்.பி.3 பிளேயர் ஆம்
பேச்சு மெமோ, டயல், ஹான்ஸ்ப்ரீ(Loud Speaker) அதே!
விபரங்கள் விபரங்கள்


இப்படி இரண்டும் ஒன்றுக்கொன்று ஒரே விதத்தில் இருந்தால், அப்புறம் என்ன வித்தியாசம்? ரொம்ப முக்கியமாக சில விசயங்கள் இருக்கின்றன! அவற்றைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்...

பேட்டரி - ரொம்ப முக்கியமான விசயம். பாதி போன் பேசும்போது, பேட்டரி இல்லாம திண்டாடியிருக்கிறீர்களா? நம்மில் பலருக்கு அடிக்கடி நடப்பதுதான் இது. எனவே திறனுள்ள பேட்டரியை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. சோனி எர்க்ஸன் - லித்தியம் பேட்டரி - 900 mAh, அதே நேரத்தில் நோக்கியா 1100 mAh. இருப்பதிலேயே அதிக திறனுள்ள பேட்டரியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்.73 யில்.

போன் மென்பொருள்: சோனி எரிக்ஸன் - ப்ரொபரைட்டரி போன் சாப்ட்வேர். அதாவது போனினுடைய செயல்பாட்டினை அதிகரிக்க முடியாது. நோக்கியா - சிம்பயான் ஆப்பரேட்டிங் சிஸ்டம்(Symbian Operating System). மென்பொருட்களை நிறுவுவதன் மூலம் நீங்கள் போனை எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இது கிட்டத்தட்ட் ஒரு மினி கம்ப்யூட்டர். இதன் குறை, ஒரு வேளை தவறான மென்பொருளை நிறுவுவதன் மூலம் தொலைபேசியை தொல்லைக்குட்படுத்த முடியும். உதா: வைரஸ் போல. சில வருடங்கள் உபயோகத்திற்குப் பிறகு போனின் திறன் குறையக்கூடும். (என்னுடைய முந்தைய 6600 ஒன்றரை வருட உபயோகத்திற்குப் பிறகு ஒலியின் அளவு குறையத் துவங்கி விட்டது.)

காமராவைப் பற்றி: ரொம்ப முக்கியமாக - சோனி எரிக்ஸன் - முழுமையான 3.2 எம்.பி. சைபர் ஷாட் கேமராவிற்குரிய அனைத்து திறனையும் கொண்டுள்ளது. ஆனால். க்வாலிட்டி? பெரும்பாலான போட்டோக்கள் அதிக வெளிர்ப்புடன் வருகின்றன. எக்ஸ்போசர், வொயிட் பேலன்ஸ் முதலியவை சரி செய்ய மிகவும் பிரயத்னப்பட வேண்டியிருக்கிறது. பிளாஷ் - இதன் பெரிய ப்ளஸ். நீண்ட தூரம் வரை பாய்கிறது. அதே சமய்த்தில் மைனஸ் பாயிண்டும் இதே. அருகிலுள்ள இடத்திற்குக் கூட அதிக அளவில் ஒளியைப் பாய்ச்சி, படத்தினை சரியாகத் தெரியாமல் செய்கிறது.

நோக்கியா - போட்டோ குவாலிட்டி அருமை. ஆட்டோ போகஸ், லென்ஸின் (Carl Zeiss) துல்லியம் . இவை சிறப்பாக இருக்கின்றன. எல்லாவற்றையும் விட, அந்த பெரிய திரை(ஸ்கிரீன்)யில் பார்க்க மிக நன்றாக இருக்கிறது.

~~~~~~~~~~~
பெட்டிச் செய்தி:

சோனி எர்க்ஸன் - பிளாகருடன் கை கோர்த்துக்கொண்டு, 'பிக்சர் பிளாகிங்' சேவை தந்திருக்கிறார்கள். 'ஜஸ்ட் லைக் தட்' ஒரு போட்டோ எடுத்து, 'பிளாக் திஸ் (Blog this)' என்று சொன்னாலே போதும். ரைட் ராயலாக உங்கள் வலைப்பதிவில் வந்து உட்கார்ந்துவிடும். சமீபத்தில் டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங்கில் நான் வலைப்பதிவு பற்றி ஒரு பிரசண்டேஷன் கொடுக்கும் போது, இந்த போனை உபயோகித்து டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங் போட்டோவினை வலையில் இட்டுக் காட்டினேன். குறை: போட்டோவின் குவாலிட்டி மிக மிகக் குறைவு.

நோக்கியா - பிளிக்கர் - தளத்துடன் கை கோத்திருக்கிறார்கள். நீங்கள் எடுக்கும் போட்டோ, பிளிக்கர் தளத்தில் உள்ள போட்டோ ஆல்பத்தில் சென்று ஜம்மென்று ஐக்கியமாகி விடுகிறது.

பை.த.வே - பிளாகர் தன்னுடைய மொபைல் வலைப்பதிவு சேவையை மிக மிகச் சுலபமாக்கியிருக்கிறது. ஒரு எம்.எம்.எஸ் போட்டோ எடுத்து, go@blogger.com என்று அனுப்பினால் போதும். உங்களுக்கே உங்களுக்காக உடனடியாக ஒரு அக்கவுண்ட் கிரியேட் செய்து உங்களுடைய படத்தினையும் காண்பித்துவிடுகிறது. லவ்லி!
~~~~~~~~~~~

நோக்கியாவில் - அவுட்லுக்(Outlook) போன்ற மென்பொருட்களுடன் காண்டாக்ட்ஸ் (contacts) சிங்க்ரோனைசேசன் (synchronization) செய்ய முடியும். சோனி எரிக்ஸன் அப்படி அல்ல. அதைத் தவிர, பி.டி.எப், வேர்ட், எக்ஸெல் போன்ற டாக்குமெண்ட்களை பார்க்கும் வசதியும் நோக்கியாவில் உண்டு.


மொத்தத்தில் - நோக்கியா என்.73, சோனி எரிக்ஸனை விட சிறப்பான ஒரு மாடல். உங்களுடைய தேவை அதிகமில்லை என்றால் தாராளமாக கே.800 போகலாம். ஆனால், நீங்கள் உங்கள் போனிலிருந்து அதிகம் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் என். 73க்கு ஒரு 'க்ளோஸ் லுக்' கொடுங்கள்!

டிப்: கூடவே என்80 ஐயும் ஒரு பார்வை பார்த்து வையுங்க. மிக முக்கிய வித்தியாசம் வைபை (wifi) - வயர்லெஸ் லான் - இருக்கிறது. குறை: பேட்டரி, கேமராவின் சில நுண்ணிய உபயோகப் பிரச்சனைகள்.

பெரும்பாலும் போன்களில் எனக்குப் பிடிக்காதது இந்தப் போன்களிலும்...

ஹாண்ட் செட் - அதாவது காதில் வைத்துக்கொள்ளும் ஸ்பீக்கர் - கள் இருந்தால் மட்டுமே எப்.எம் ரேடியோ கேட்க முடியும் என்ற கட்டாயத்தை இந்தப் போன்கள் விதிக்கின்றன. என்னத்தான் டெக்னிக்கலாக ஹாண்ட் செட்கள் ஆண்டெனாவாக உபயோகிக்கபடுகின்றன என்று புரிந்து கொண்டாலும், பயனர்கள் பார்வையில் இது எரிச்சல்.

*********

இந்த வருடத்தின் மத்தியில் வெளியிடப்பட இருக்கும், ஐ.போன் - ஐபாட் மூலம் பிரபலமான ஆப்பிள் கம்ப்யூட்டரின் படைப்பு. ஒட்டுமொத்த செல்போன் உலகையும் அதிசயமாகப் பார்க்க வைத்திருக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போன் இது. 8 ஜி.பி மெமரியுடன், இதுவரை வந்திருக்கும் அனைத்து செல்பேசி தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி 2007ன் மத்தியில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த பேசியின் விலையும் அதிகமில்லை என்பதே இதன் எதிர்பார்ப்பிற்கு மற்றுமொரு காரணம். ஆண்டின் இறுதியில் உலகெங்கும் கிடைக்கும் என்று தெரிகிறது. http://www.apple.com/iphone/

"விகாஸ் சாப், நோக்கியா என்.73 நல்லாருக்கு. இன்னும் இந்த பழைய போனையே வச்சுகிட்டிருக்கீங்களே. எப்ப மாத்தப்போறீங்க?"

"அடுத்த வருசம் ஐ.போன் வந்தவுடனே ஒரேயடியா மாத்திக்கலாம்பா. "

"!!!!!!!!!"

கிசு.கிசு: ஐ.போன் என்பது ஏற்கனவே ஒரு ஆன்லைன் டெலிபோன் கம்பெனி உபயோகப்படுத்தும் பெயராம். ஆப்பிளின் அறிவிப்பு வந்த உடனேயே இதனை எதிர்த்து அந்த கம்பெனி கோர்ட்டிற்குப் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
posted by சாகரன் @ 1/25/2007 11:31:00 PM  
5 Comments:
 • At 2:12 AM, Anonymous Anonymous said…

  நான் தற்போது k800 வைத்திருக்கிறேன். மிகுந்த ஆசையோடும் எதிர்பார்ப்புகளோடும் வாங்கிய போன். சமீபத்தில் N73 பற்றியும் N Series பற்றியும் படித்தபோது அதை வாங்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. ஆனால் தற்போது Apple-ன் iPhone எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. PDA, phone, iPod என்று அத்தனை வசதிகளும். பெயரில் என்ன இருக்கிறது. லிங்க்ஸிஸ் கம்பெனி VOIP போனுக்கு இந்த பெயரைப் பயன்படுத்துகிறது. பார்க்கலாம், இதற்காகவே US போய் ஒரு போன் வாங்கி வந்துவிட வேண்டியது தான்.

   
 • At 2:36 AM, Anonymous Anonymous said…

  //ஹாண்ட் செட் - அதாவது காதில் வைத்துக்கொள்ளும் ஸ்பீக்கர் -//

  head set ? :-))

  why word verification is still there in the comment ?

   
 • At 7:55 AM, Anonymous Anonymous said…

  N72 provides accessory to external speakers as well.

   
 • At 8:25 AM, Blogger சாகரன் said…

  திருவடியான்,
  >>
  பெயரில் என்ன இருக்கிறது. லிங்க்ஸிஸ் கம்பெனி VOIP போனுக்கு இந்த பெயரைப் பயன்படுத்துகிறது.
  >>

  ரொம்ப நன்றிங்க. நிறைய தெரிஞ்சு வச்சுகிட்டிருக்கீங்க. நேற்றுதான் ஒரு கட்டுரை பார்த்தேன். ஐ.போனுக்கு கிட்டத்தட்ட போட்டியைக் கொடுக்கும் என்.95 என்று. 5 மெகா பிக்ஸல் கேமரா, ஜி.பி.எஸ் என்று நிறைய இருக்கிறதாம். எத்தனையோ எ.பி.3 பிளேயர்கள் வந்தாலும் இன்னமும் ஐ.பாட் தான் டாப்! எனவே ஐ.போனுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகிறதே தவிர குறையவில்லை! :-)

  >>இதற்காகவே US போய் ஒரு போன் வாங்கி வந்துவிட வேண்டியது தான்.>>

  போறப்போ சொல்லுங்க. பைனான்ஸ் கண்டிசனைப் பார்த்துட்டு சொல்றேன். எனக்கும் ஒண்ணு தேவைப்படும் :-))

  அனானி நண்பா,
  >>
  head set ? :-))
  >>

  ஆமாம்பா, ஆமாம். ஹெட் செட்டே தான்! :-) Thanks for the correction.

  >>
  why word verification is still there in the comment ?
  >>

  Removed!

   
 • At 8:19 PM, Anonymous Anonymous said…

  அன்பு அலைக்கு,
  நீங்கள் சொன்னதை வைத்து ஒரு ஒரு N73 வாங்கி விடலாம் என நினைத்தேன். அதற்குள் i phone, N90,N95 என்றெல்லாம் தெரிந்தபின், நானும் ஒரு வருடத்திற்கு இருப்பதை வைத்து ஒப்பேற்றும் முடிவுக்கு வந்துவிட்டேன்.
  என்றென்றும் அன்புடன்,
  பா.முரளி தரன்.

   
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER