சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Tuesday, January 30, 2007
போட்டோ ப்ளே (Photo Play)
'சார் உங்க நகைச்சுவைப் பேச்சை என்னுடைய பதிவில் எழுதியிருக்கிறேன்' என்று அல்லாபதி சுப்ரமணியத்திடம் சொன்னேன். ஏனோ டென்ஷனானார். 'சார் அது நான் சொந்தமாக எழுதினது இல்லை சார். அதை எழுதினது மல்லாடி வெங்கட கிருஷ்ண மூர்த்தி. பிரபலமான எழுத்தாளர். சிருங்காரம்.காம் நடத்தி வருகிறார். அவருடைய தளத்திலிருந்த போட்டோ ப்ளே தான் நான் பேசியதன் மூலக்கதை. எந்த கிரெடிட்டாக இருந்தாலும் அவருக்கே சென்று சேர வேண்டும். தயவு செஞ்சு எழுதிடுங்க..'

"சரி சார், நான் எழுதிவிடுகிறேன்."

***

'ஹல்லோ பாஸ்.. உங்களுக்கு சுப்ரமணியம் தெரியும்ல. அவரு ஏதோ சிருங்காரம், போட்டோ ப்ளே அப்படின்னு சொன்னாரு. அது என்ன போட்டோ ப்ளே?'

'அது ஒண்ணும் பெரிய விசயம் இல்லைங்க. நடிகர்களை வைத்து போட்டோ எடுத்து காமிக்ஸ் போல கதை சொல்லும் டெக்னிக். அவ்வளவுதான்'

மல்லாடி வெங்கட கிருஷண மூர்த்தியின் 'சிருங்காரம்' தளம் நிசமாகவே சிருங்கார மணம் வீசுகிறது.

"என்னங்க இது... ஏதாவது போர்னோ கிராபி தளமா? "

"இல்லை இல்லை... ஆனால் நிச்சயமாக குழந்தைகளுக்கான தளம் இல்லை."

- இதுதான் பதிலாகக் கிடைத்தது. ஒரு வார்த்தை கூடத் தெரியாத 'சுந்தரத்' தெலுங்கில் தளம் இருந்தாலும். நல்ல வேளையாக போட்டோ பிளே தளத்தினை ஆங்கிலத்தில் அமைத்திருக்கிறார் மல்லாடி.

அந்தக் கதை: http://www.photoplayz.com/forsale/

ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம்! ஜஸ்ட் 36 ஸ்லைடில் அழகாக கதையைச் சொல்லியிருக்கிறார். (முந்தானை சரிய விட்டு தாராளமாக போஸ் கொடுக்கிறார்கள்! இதைத்தான் 'ரொமாண்டிக் ப்ளே' என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது! :-))

Labels: , , , ,

posted by சாகரன் @ 1/30/2007 05:51:00 PM  
1 Comments:
  • At 5:29 PM, Blogger Unknown said…

    //ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம்! ஜஸ்ட் 36 ஸ்லைடில் அழகாக கதையைச் சொல்லியிருக்கிறார். (முந்தானை சரிய விட்டு தாராளமாக போஸ் கொடுக்கிறார்கள்! இதைத்தான் 'ரொமாண்டிக் ப்ளே' என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது! :-))//

    உண்மையச் சொல்லுங்க. அவங்க அழகா சொன்னது கதையா சதையா?

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER