சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, October 29, 2006
ஒரு ஷிப்ட்
சட்டென்று காதல் வருமென்று ஜாதகத்தில் சொல்லலியே...

அலுவலகத்தின் உள்ளே நுழைந்த போது, இந்த பாடல் வரிகள் ஏனோ நினைவிற்கு வந்தது. ஈகைப் பெருநாள் விடுமுறைக்காக சுற்றியிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும் யோசனையில்தான் இருந்தார்கள். இணையத்தில் மேய்ந்து துபாய் செல்வதும், அங்கு பார்க்க வேண்டிய இடங்களையும் அருகிலிருந்த நண்பர் பிரிண்ட் எடுத்துக் கொண்டிருந்தார். சென்ற முறை சென்னை செல்லும் போது, துபாய் நான் சென்றிருந்த காரணத்தினால், பார்க்க வேண்டிய இடங்கள் எவை எவை என்று என்னிடம் கேள்விகள் வேறு.

நானும், என் பங்கிற்கு அருகிலிருந்த ஹில் ஸ்டேஷன் 'அப்ஹா' செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தேன்.

அன்றோடு கடைசி - இன்னும் 20 நிமிடங்களில் அலுவல் முடிந்துவிடும். அப்பொழுது வந்தது அந்த மின்னஞ்சல்!

நாளை மறுநாள் - விடுமுறை தினத்தில் - உங்களது கோப்புகள், கணினிகள் மாற்றப்படும் என்று! நல்லதாக ஒரு இடம் பார்த்து வைத்திருந்தேன். இப்பொழுது அது கிடைக்காது போல இருந்தது. (கடைசியில் கிடைக்கவும் இல்லை).
எதற்கும் விடாமல், புது இடத்திற்கு எனக்கு துண்டு போட எழுதி அனுப்பிவிட்டு - என்னென்ன முடியுமோ அதெல்லாம் பேக் செய்துவிட்டு கிளம்பிவிட்டேன்.

இன்று,

புது அலுவலகத்தில் இரண்டாம் நாள். சுற்றிலும் பெட்டிகள். ஆனால் எதையும் பிரிக்கத்தோன்றவில்லை.
posted by சாகரன் @ 10/29/2006 02:55:00 PM   0 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER