சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, July 19, 2006
சவுதியில் 3G - ஒரு ஆரம்பம்…

டெக்னாலஜி உலகின் மிகவும் சிலாகிக்கப்படும் டாபிக்குகளில் இதுவும் ஒன்று! பல புதிய கம்யூனிகேஷன் வழிகளைத் திறந்துவிடும் டெக்னாலஜி. கைக்கு அடக்கமான தொலைபேசிச் செல்கள் இருந்த இடத்திலிருந்து பேச்சினை மட்டுமல்ல படங்களையும் பேசுபவரையும் இடத்தினை வீடியோ படங்களாக அனுப்பும். தேவைக்கெற்ப (ஆன் டிமாண்ட்) படங்கள், டி.வி நிகழ்ச்சிகள் என்று பார்க்கலாம். அதிவேக இணைய இணைப்பிற்கு டெலிபோன் கேபிள்களைத் தேட வேண்டியதில்லை. இன்னும் எத்தனை எத்தனையோ பயன்கள் இதில்!

சவுதி அரேபியா - டெக்னாலஜியை ஏற்கனவே வாங்கி வைத்திருந்தாலும், இப்பொழுதுதான் உபயோகத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த டெக்னாலஜிகள் இங்குள்ள பலருக்கு மிகப் புதிது.

சில காலம் முன்பு வரை (சுமார் ஓருவருடம் முன்பு வரை, கேமரா தொலைபேசிகளைக் கூட விற்பனை செய்ய தடை இருந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல, 3.5 ஜி. அனைத்து தொலைபேசிகளிலும் தானாகவே எனேபிள் செய்யப்பட்டு விட்டதாக சவுதியின் முக்கிய தொலைபேசி நிறுவனங்களில் ஒன்றான மொபிலி( மத்திய கிழக்கின் எடிசாலட்) நிறுவனம் தெரிவிக்கிறது. விலை விவகாரங்கள் இங்குள்ள வாய்ஸ் சார்ஜோடு கம்பேர் செய்யும் போது மிக மிகக் குறைவு.

3ஜி உள்ள மொபைல்கள் இப்பொழுதெல்லாம் லோக்கல் மார்கெட்டில் கிடைப்பதில்லை.
லோக்கல் மார்கெட் - என்பது பத்தா போன்ற சில இடங்களிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கடையா என்பதெல்லாம் தெரிந்து கொள்ளத் தேவையில்லாத - கடைகளில் இது போன்ற மொபைல்களை குறைந்த விலையில் வாங்க இயலும். அதுவே இத்தகைய கடைகளில் இந்த மொபைல்கள் கிடைக்காததன் ரகசியம்.

ஜியெண்ட், ஜரீர், கேரிபோர், ஹைபர் பாண்டா, போன்ற பெரிய கடைகளில் பிரச்சனை இல்லை. கிடைக்கிறது!

இந்த விபரங்கள் பற்றி பேசும்போது, சவுதி அரேபிய நண்பர்கள் பலரின் மொபைல் மாற்றும் வே(மோ)கம் பற்றி சில வரிகள் பேசித்தானாகவேண்டும்.பெண்களுக்கு நிகராக ஆண்களின் விருப்பம் ஒன்று கண்டுபிடிக்க இயலும் என்றால் அது எலக்ட்ரானிக்ஸாகத்தான் இருக்கும் என்று எனக்கு பல நேரங்களிலில் தோன்றுவதுண்டு (போதுமான அளவுக்குமேல் பணம் இருந்தால் என்பதையெல்லாம் நடு நடுவில போட்டுக்கணும்). அது சரிதான் என்பதை மெய்ப்பிப்பது இங்கு மொபைல்போன்கள் விற்பனை செய்யப்படும் முறை.

எண்.80 என்ற நோக்கியாவின் புது மொபைல் போன் சவுதியில் அறிமுகப்படுத்தப்பட்டும சுமார் ஒன்றரை மாதங்கள் இருக்கும். இந்த மொபைல் போனின் மேல் எனக்கு ஒரு கண் இருந்தது. என்னுடைய 6600 மொபைல் போன் கிழ்விழுந்து உடைந்து போன தினத்திலிருந்து, இது குறித்து ரிசர்ச் செய்ய ஆரம்பிந்த்திருந்தேன்.

இந்த மாடல் சவுதியின் மார்க்கெட்டுக்கு வந்த போது கேட்ட விலை : 3800 ரியால் - சுமார் 45000+
வெறும் 20 நாட்களில் இதன் விலை : 2800 ரியால்கள் - சுமார் 33000+
அடுத்தடுத்த வாரங்களில் இதன் விலை 2500, 2400, 2300 என்று இறங்கி நேற்று விசாரிக்கும் போது 2100 ரியால்களுக்கு வந்துவிட்டது! இன்னமும் இறங்கக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது.

நோக்கியா மாடல்களில் விலை வீழ்ச்சி எல்லோரும் அறிந்ததுதான் என்றாலும்… நெருங்கிப் பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

சொல்லவந்ததை விட்டு வேறெங்கோ…. ஷ்ஷ்…

posted by சாகரன் @ 7/19/2006 07:21:00 PM   1 comments
Tuesday, July 11, 2006
ஒரு நிகழ்ச்சி

கடந்த மாதக்கடைசியில் இந்தியக் கலைக்குழுவின் ஒரு நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது!

டோஸ்ட் மாஸ்டர் தந்த தகிரியத்திலும், திரு. ஜெயசீலன் அவர்கள் தந்த உற்சாகத்திலும் மேடையேறி ஓரளவிற்கு ஒப்பேற்றியாகிவிட்டது! இந்த மீட்டிங் முடியும் போது இரவு சுமார் 1:20 மணி இருக்கும்….

ஜூலை மாத ஆரம்பத்திலிருந்து ஆகஸ்ட் கடைசி வரை சவுதி அரேபியாவில் உள்ள் பெரும்பாலான எக்ஸ்பாட்ரியேட்கள் சொந்த ஊருக்கு பயணித்துவிடுவது வழக்கம். குறைவே இல்லாமல் இந்த முறையும் பெரும்பாலானோர்கள் எஸ்கேப்.

இந்த நிகழ்ச்சி குறித்து, என் அலுவலக நண்பரொருவர் எழுதிய ஆர்டிகிள் ய்ஹிந்த் தளத்தில்…Cultural Event Of ITFAA

posted by சாகரன் @ 7/11/2006 07:20:00 PM   0 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER