சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, June 25, 2006
Toast Masters - Entrance

டோஸ்ட் மாஸ்டர்ஸ் - சில தினங்களுக்கு முன்னர் டோஸ்ட் மாஸ்டர் புரோகிராம் விசாலக்கிழமை (இது ஒரு சுவையான பேச்சு வழக்கு!) மாலை நேரத்தில் நடக்க இருப்பதாகவும் வரவேண்டுமாயும் எனக்கு ஒரு அழைப்பு வந்தது.

ஏற்கனவே ஒரு முறை இந்த புரோகிராம் அட்டெண்ட் செய்திருக்கிறேன். அருமையாக இருக்கும். இந்த வாரம் இது நடந்த இடம் ஒரு பள்ளிக்கூடத்தின் ஒரு அறை. இரண்டு மணி நேரத்திற்கு வாடகை 50 ரியால் ( சுமார் 15 டாலர்)
வாடகை அதிகமென்பதே இல்லை.. இப்படி ஒரு இடம் கிடைக்கத்தான் அனைவரும் திண்டாடி வருகின்றனர்.
(பிரின்ஸீ மேடம் - ரொம்ப சின்னப் பொண்ணு - அவர்களிடம் எழுத்துக்கூடத்திற்காக இடம் கேட்டேன். ஆனால் வெள்ளிக்கிழமைகள் செம புல்லாம்!)

டோஸ்ட் மாஸ்டர் - ப்ரசண்டேஷன் ஸ்கில் - இம்ப்ரூவ் செய்து கொள்ள உதவும் ஒரு சங்கம். கூட்டம் கம்மி என்பதால் இரண்டு குரூப்-பினைச் சேர்ந்தவர்கள் இணைந்து ரியாத்-தில் இந்த கூட்டத்தினை வாரா வாரம் நடத்தி வருகிறார்கள். எலோருமே இண்டலக்சுவல்ஸ். நல்ல வேலையில் இருப்பவர்கள். படிக்கும் மாணாக்கர்கள். ஆண்கள் பெண்கள் என்று ஒரு கண்ணியமான குழு இங்கு இருக்கும். ரியாத் நகரத்தில் நடக்கும் தமிழ் மற்றும் அனைத்து மொழி கலை நிகழ்ச்சிகளில் இந்த முகங்களையே நீங்கள் பார்க்க முடியும்!

இந்த வாரம் , போரன் ஜோஷி என்ற குஜராத்தி பெண் - இந்தியாவில் கல்லூரியில் படிக்கிறார், விடுமுறைக்கு சவுதி - கொடுத்த பிரசண்டேஷர் பார்த்து மொத்த கூட்டமும் ஸ்தம்பித்திருந்தது என்று சொன்னால் மிகையே இல்லை. இந்த பெண் அழகு என்பது மட்டுமல்ல்… இவர் பேசும் போது, கைகள், உடல், முகம், புருவம், கண் காது என்று ஒரு ஓரங்க நாடகமே நடந்தது! யப்பா.. இந்த ஜெனரேஷன் எவ்வளவு திறமையாக இருக்கிறார்கள்!! இவரது தம்பியும் ஒரு பிரசங்கம் செய்தான் - ஹாட் சப்ஜெக்ட் - ரிசர்வேஷன் பற்றி. ஒவ்வொரு காஸ்ட் க்காகவும் தனியாக கல்லூரி - அதாவது MBA for MBC, என்பது போல ஆரம்பித்துவிடலாமே என்று கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லவும் மாட்டார்கள் என்று பின்னர் பேசியபோது புரிந்தது. இந்த மீட்டிங் பேச்சுப்பயிற்சிக்காகத் தானே தவிர, பேச்சுகளில் உள்ள நிறை குறைகள் உள்ளே யாரும் நுழைவதில்லையாம்! - ரியலி ஜெண்டில்.

posted by சாகரன் @ 6/25/2006 07:18:00 PM   0 comments
Saturday, June 24, 2006
Why men cannot listion; why women cannot find the map…!

இந்திய கலைக்குழுவின் அடுத்த நிகழ்ச்சிக்கான மீட்டிங்..!

கொஞ்சம் சீக்கிரமாகவே மீட்டிங் நடக்கும் இடந்தில் இருந்தோம்…

வழக்கம் போல வர்ணிகா, கொஞ்சம் கொஞ்சமாக இடத்தினை நோக்கம் விட்டபடி தனக்கு பிடித்த விதத்தில் எப்படி விஷமம் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் இருந்தாள்.

எல்லோரையும் எப்பொழுதும் பாராட்டுவதென்பது ஒரு நல்ல பழக்கம். அதிலும் அவருக்கு அந்த பழக்கம் மிக மிக அதிகம்! தினமலரில் வெளிவந்த என் வ்லைப்பதிவு அறிமுகம் (?!) பார்த்துவிட்டு, என்னைப் புகழ்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தாக்கிக்கொண்டிருந்தார்.அதிலும், பார்ப்பவரிடமெல்லாம், “நிறைய எழுதியிருக்காருங்க.. தினமலர்ல எல்லாம் நிறைய எழுதுவாரு” என்று ‘தேன்கூடு வலைப்பதிவர்’ ரேஞ்சுக்கு புகழ்ந்து கொண்டிருந்தார்!

இன்றும் பேச ஆரம்பித்த போது, எனக்கு எதற்காகவோத்தான் இப்படி இழுக்கிறார் என்று தோன்றி விட்டது….

அவர் சொன்னதன் சாராம்சம்:

தலைப்பில் குறிப்பிட்ட பெயருடைய இந்தப் புத்தகத்தில், ஆண்கள், பெண்கள் குறித்து அலசப்பட்டிருக்கிறது. ஆண்கள், ஆதிகாலத்தில் வேட்டைக்கு புறப்பட்டு வழி நெடுக மார்க் செய்து பின்னர் திரும்பவும் அதே வழியில் வேட்டையில் கிடைத்த உணவுப் பொருட்களும் வந்தனராம். ஆனால் அதே நேரத்தில் பெண்கள், வீட்டில் இருந்தவண்ணம், பாம்பு, பூரான், பல்லி முதலிய பூச்சிகளிலிருந்து குழந்தைகளை காபந்து பண்ணிய வண்ணம் இருந்திருக்கிறார்கள்.

இந்த காரணங்களினால், பெண்களுக்கு இயல்பாகவே வீடு மற்றும் அருகில் உள்ள அசைவுகளில் பொருட்களில் கவனம் அதிகம்! ஆனால் ஆண்களுக்கு வெளியிடத்தில் செல்லும் போதும், தூரத்தில் இருக்கும் பொருட்களிளைப் பற்றிய கவனமும் அதிகம்! சுமார் 200 மீட்டர் தூரத்தில் செல்லும் பெண்ணின் சேலை கலரைச் சொல்லக்கூடிய ஆனால், அருகிலுள்ள பிரிட்ஜில் ‘வெண்ணை’யை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது எதிரிலேயே இருந்தாலும் கண்ணில் படுவதில்லை!

இது தவிர, ஒரு நாளைக்கு ஆண்களால் செய்யப்ப்டும் செயல்கள் சுமார் 7000 அசைவுகள். இந்த அசைவுகள் அனைத்தும் அலுவல்களிலேயே இந்த காலத்து ஆண்கள் செய்துமுடித்து விடுவதால், வீடு திரும்பும் போது அவர்கள் டயர்-டாக இருப்பது சகஜம். பெண்களுக்கான ஒரு நாளைய அசைவுகளோ 21000. இந்த 21000 அசைவுகளும் இந்தக் காலத்துப் பெண்களால் செய்யப்படுவதில்லை. (ம்.. சுகம் கண்டுட்டாங்க!) வாஷிங்மிஷின், மிக்ஸி கிரைண்டர் இத்தியாதிகளால் அவர்களது வேலை சுலபமாக்கப்பட்டு… அசைவுகளும் குறைக்கப்பட்டுவிடுவதால், மாலை நேரத்தில் அவர்களால் ‘பிரிஸ்க்’காகவே இருக்க முடிகிறது!

அப்புறம் என்ன, வெளியில அழைச்சுட்டு போகச்சொல்லி பிரச்சனைதான்!

இந்த புத்தகத்தினைப் படிக்கும் ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் இந்த பிரச்சனைகளின் ஆணி வேர் பிடிபட்டு, வீட்டில் பிரச்சனைகள் மிகக் குறைவாக இருக்குமாம்! இந்த புத்தகம் இதுவரை இவரால் பரிந்துரைக்கப்பட்டு படித்தவர்கள் அனைவரும் மிகவும் நிம்மதியாக இருப்பதாக அறியப்படுவதாகவும் சொன்னார்!

இவ்வளவும் சொல்லிட்டு, என் மனைவியைப் பார்த்து, ‘நீங்க இவ்வளவு நேரம் கம்ப்யூட்டரிலேயும், நிறைய ஆக்டிவிட்டீஸ்லயும் ஈடுபடறத்துக்கு விடற உங்க மனைவி மாதிரி கிடைக்கிறதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்!’ அப்படின்னு அவர் போட்டு வாங்காமல் மட்டும் இருந்திருந்தால் …

posted by சாகரன் @ 6/24/2006 07:16:00 PM   0 comments
Wednesday, June 21, 2006
ISP & followup

கடைசியில் சைபீரியாவே வாங்கியாகிவிட்டது. வேகம் ஒரளவிற்கு நன்றாகவே இருக்கிறது…

2.5 ஜி.பி பேண்ட்விட்த் லிமிட் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான். சவுதியில் எங்கிருந்து டவுண்லோடு செய்யமுடியும்.. மெகாஅப்லோடு போன்ற தளங்கலெல்லாம், பிளாக் ஆகியிருக்கும் போது!

இன்னும் ஒரிரு வாரத்தில் கலைக்குழுவின் பிரோகிராம் ஒன்று வரக் கூடும் என்று தெரிகிறது. மறுபடி கொஞ்சம் வேலை அதிகரிக்கும்.

BEA Weblogic 9.2 b இன்ஸ்டால் செய்திருக்கிறேன். கலக்கலாக இருக்கிறது வொர்க்ஷாப். இன்னும் உள்நுழைந்து பார்க்க வேண்டும் என்னென்ன செய்யலாம் என்று!

Vignette - கூட வேலை செய்ய வேண்டும். நேரம் தான் பரந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தின் நடப்பில் இருக்கும் எங்கள் பில்டிங், விரைவில் வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்யப்படப்போவதாக பட்சிகள் சொல்லுகின்றன. அதற்குள் சில வேலைகள் செய்து முடித்து விட வேண்டும்!!

posted by சாகரன் @ 6/21/2006 07:14:00 PM   0 comments
Sunday, June 18, 2006
DSL talks..

சவுதி அரேபியாவில் டி.எஸ்.எல் கனெக்டிவிட்டியில் இப்பொழுதெல்லாம் நிறைய Restrictions புகுத்தியிருக்கிறார்கள்.

புதிதாக இணைப்பு வாங்குபவர்களுக்கு திண்டாட்டம்தான்!

இந்த நிலையில்.. ஒரு சிறு அலசல்!

1) Jeel.net -இந்த சர்வீஸைத்தான் நான் இது நாள் வரை உபயோகப்படுத்தி வந்தேன். நன்றாகத்தான் இருந்தது. டவுண்லோடு ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இல்லை. எல்லாம் சரியாகவே இருந்து வந்தது. யூசர் ஐடி - xxx@64k.jeel.com என்று கொடுப்பார்கள்.

இப்பொழுதெல்லாம் xxx@64k.jeelcorp.com என்று கொடுக்கிறார்கள். இதில் ஏகப்பட்ட கூதல் இருக்கிறது. ஒழுங்காக பிரவுசிங் மட்டும்தான் வேலை செய்யும் மற்றபடி, எல்லாமே இவர்கள் ஓபன் செய்திருக்கும் பிராக்ஸிக்கு உட்பட்டுத்தான் வேலை! இது ஒரு கடி . இந்த சர்வீஸை இனிமேல் அவாய்ட் செய்வது நல்லது.

2) Nesma.com - இதுவும் நன்றாக வேலை செய்த பலராலும் உபயோகிக்கப்படும் ஒரு தளம். மிக சிறப்பாக இருந்ததாக அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் இனிமேலும் இல்லை!. தனியாக ஒரு பைப் போட்டு.. அதில் பலரை உள்நுழைத்து என்று ஏகப்பட்ட வேலைகள் செய்துவிடுவதால். இது மிகவும் வேகம் குறைந்துவிடுகிறது!

3) Awalnet.com - மிகவும் பிரபலமான ஐ.எஸ்.பி. எனினும், இந்த ஐ.எஸ்.பி-யிலும் நெஸ்மா போல ரெஸ்ட்ரிக்சன் இருப்பதாகத் தெரிகிறது. இதனை இன்று சோதிக்க இருக்கிறேன்.

4) SaudiNet - வேகம் குறைவு (டி.எஸ்.எல் - 64கே யில்)

5) Cyberia - டவுண்லோடு ரெஸ்ட்ரிக்ஷன் உண்டு. 2.5 GB ஒரு மாதத்திற்கு. அதற்குப் பிறகு 1.5 ஜி.பி ஷேர்டு நெட்வொர்கில் விட்டு விடுவார்களாம். பின்னர் 1ஜிபி ஷேர்டு நெட்வொர்கில் விட்டு விடுவார்கள். அப்புறம் டிஸ்கனெக்ட் ஆகிவிடும். மொத்தத்தில் ஒரு மாதத்திற்கு 3 - 4 ஜீபி வரை உபயோகப்படுத்தலாம். இது ஓரளவு போதும் என்றே தோன்றுகிறது. வேகம் அதிகம் இருக்கும் வரை 2.5 ஜி.பி / மாதம் மிகவும் போதுமானது.

முடிவாக - இப்பொழுதைக்கு சைபீரியா மூன்று மாத கார்ட் வாங்க இருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

posted by சாகரன் @ 6/18/2006 07:13:00 PM   0 comments
Sunday, June 11, 2006
டைம் ஸ்லாட் - சில சிந்தனைகள்.

சில தினங்களாகவே உடல்நிலையில் ஒரு சுணக்கம். எக்ஸிகியூட்டிவ் கமிட்டியில் புதிதாக இணைந்த பின்னர் நடத்தப்படும் முதல் மீட்டிங் என்பதால், இந்த கூட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாக எனக்குப் பட்டது.

கூட்டத்தில் சில அஜெண்டாக்கள் பேசப்பட்டன. இதில் எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டது இது..

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 8:30 - முதல் 9:00 மணி வரையிலான பொதிகை சேனல் ஸ்லாட் ரியாத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! 1000 ரியாலுக்கான ஸ்பான்ஸர் மட்டும் கொடுக்கப்பட்டு விடுமென்றால்!

இதில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

1) 1000 ரியாலுக்கான ஸ்பான்ஸர்; இதை பிடிப்பது கூட சுலபமாக இருக்கலாம். 3 நிமிட நேரங்களில் எப்படி பிரித்து அட்வர்டைஸ்மெண்ட் கொடுப்பது என்பதை கூட sort out செய்துவிடலாம்; ஆனால்..

2) எத்தனை புரோகிராம்கள் கொடுக்க இயலும்?

- பொதிகை என்பதால், இது தமிழர்கள்மட்டுமே பார்ப்பது. இருப்பது 5 தமிழ்ச்சங்கங்கள். 5 சங்கங்களும் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு புரோகிராம் என்று வைத்தால். 5 புரோகிராம்கள். மூன்று மணி நேரத்திற்கு மேற்பட்ட ஒவ்வொன்றும் எடிட் செய்த பிறகு, 4 வாரங்களுக்கு வரும் என்று வைக்கலாம். 5*4 = 20 வாரங்கள். ஆர்.டி.எஸ் - பெரிய புரோகிராம், வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒன்று 1 *6 = 6 வாரங்கள். மொத்தமுள்ளா 54 வாரங்களில் (ஒருவருடம்) 26 வாரங்கள் முடிவாகிவிட்டாலும், இன்னமும் 18 வாரங்கள் சும்மா இருக்கப்போகிறது. இதற்கு என்ன செய்யலாம்?

அ) தனியாக இதற்கென்றே புரோகிராம் செய்யலாம்… எப்படிப்பட்ட புரோகிராம்கள்?

1) ரியாத் வாழ் மக்களினை பேட்டியெடுத்து. அவர்களது வாழ்க்கை முறையினை உலகுக்கு அறிவிக்கலாம். அத்துடன் அவர்களுக்கு பிடித்த பாடல்களைக்(அருத பழசு ஐடியா, ஆனாலும் வொர்க் அவுட் ஆகும்.) கேட்டு ஒளிபரப்பலாம்.
2) லேபர் கேடர் என்று சொல்லப்படும் தமிழர்களின் பிரச்சனைகளை அலசும் விதமாக ஒரு அரட்டை அரங்கம் ஏற்பாடு செய்யலாம். (இண்டோர் தான்:-))
3) சில நிமிடங்களுக்கு, ரியாத்-தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை வாசிக்கலாம். வாரத்தில் சில செய்திகளாவது கிடைக்காமல் போகாது!
4) செவ்வாய் கிழமை நாடகம் போல.. இண்டோர் நாடகங்கள் போடலாம்.
5) ரியாத் எழுத்துக்கூடத்தின் சார்பாக - எழுத்தாளர்களை வரவழைத்து - பேட்டி எடுக்கலாம்
6) ரியாத் நகரத்திற்கு அடிக்கடி பல பெருந்தலைகள் வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். அவர்களை பேட்டி எடுக்கலாம்.
7) ரியாத் + சுற்றியுள்ள நகரங்களில் பார்க்ககூடிய இடங்களை சுட்டு, ஒரு சுற்றுலா வீடியோ தரலாம்.
8) ரமலான் மாதத்தில் - இஸ்லாமிய புரோகிராம்களை - நிறைய ஐடியா செய்யலாம் - ஒளிபரப்பலாம்.
9) இந்தத் துறையில் ஆர்வமுள்ள தமிழர்களை ரியாத் தமிழ்ச் சங்க யாகூ குரூப் மூலமாக கூப்பிட்டு ஆலோசனை கேட்கலாம்.

மொத்தத்தில் ஒரு வார விசுவல் பத்திரிக்கையாகவே நடத்த முடியும்! மனமும் - நேரமும் - பணமும் இருந்தால் :-)

posted by சாகரன் @ 6/11/2006 07:12:00 PM   0 comments
Saturday, June 10, 2006
புரிதல் - சில எண்ணங்கள்; முடிபுகள்

இன்றைய புரிதல் மீட்டிங்கில் வழமை போல வெகுசில நண்பர்களே இருந்தார்கள்…

புரிதல் கூட்டத்தில் யோசிக்கப்பட்ட சில ஐடியாக்கள்:

1) சவுதியைச் சேர்ந்த இந்தியச் சங்கங்கள் அனைத்தையும் இணைத்து, ஒரு குழுமம் அமைக்கப்பட வேண்டும். இந்தச் சங்கம் பொதுவான சில கொள்கையையும், தனிப்பட்ட முறையில் அவர்களது வழமையான எண்ணங்களையும் கொண்டிருக்கலாம். வழமை என்று சொல்வது, கல்சுரல் ஆக்டிவிட்டிகள்.

2) சவுதி சங்கங்கள் அனைத்தையும் இணைத்து ஒரு இந்திய சங்கம் அல்லது குழு உருவாக்குவது பற்றி யோசித்தோமல்லவா, இத்துடன் இன்னொரு விடயம் செய்யலாம். உறுப்பினர் கட்டணம் : 30 ரியால் வசூல் செய்து, இந்த 30 ரியால் கட்டணத்தை ஹாஸ்பிடல் இண்ஸூரஸிர்க்காக அமைத்து விடலாம்.
இதன் மூலம், ஏராளமான இந்தியர்களை உறுப்பினராக்கவும் முடியும் என்பது மட்டுமல்ல. ஒரு முழுமையான டேட்டாபேஸ் உருவாக்கிவிடமும் முடியும். மருத்துவ சோதனை காலத்தில் இன்ஸூரன்ஸ் பணம் உதவிக்கு வரும். (தமிழர்களிடம் பணம் கலெக்ட் செய்யக்கூட முடியும். ஆனால் பேச்சிலிருந்து தப்பிக்க முடியாது. இதற்கு இது எவ்வளவோ பெட்டர் ஐடியா.)

3) புதிதாக தமிழர்களுக்கென்று உதவி (வெல்பேர்) டிரஸ்ட் அமைப்பது வேஸ்ட். ஏற்கனவே நன்றாக நடந்துவரும், கைரலி, ரியா, இண்டியன்ஸ் பார் கே.எஸ்.ஏ முதலிய அமைப்புகளுடன் இணைவது சாலச் சிறந்தது.

posted by சாகரன் @ 6/10/2006 07:11:00 PM   0 comments
Saturday, June 03, 2006
ஹீரோக்களால் தூக்கி நிறுத்தப்படும் இந்திய கிரிக்கெட்

எப்பொழுதுமே இந்திய கிரிக்கெட் தற்காலிக ஹீரோக்களால் மட்டுமே தூக்கி நிறுத்தப்படுகிறது.

சிறு வயதில் உனக்கு எந்த விளையாட்டில் விருப்பம் என்று என் விளையாட்டு ஆசிரியர் கேட்ட போது நான் சொன்னது, ‘கிரிக்கெட்’. அதற்கு அவர், பலர் ஒன்றாக இணைந்து விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றும் சுவாரஸ்யம் இருக்காதென்றும், தனித்து விளையாடும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தவும் என்னை நிர்பந்தித்திருந்தது நினைவிற்கு வருகிறது!

இப்பொழுதுதெல்லாம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் போது, அப்படி ஒன்றும் பலர் இணைந்து விளையாடும் விளையாட்டாகவோ ஒருவரது விளையாடும் திறம் டீம் ஸ்பிரிட் மூலமாக அடிபட்டுப் போவது போலவோ தெரியவில்லை. மாறாக, ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒரு 15 நிமிடப் புகழ் போல யாரவது ஒருவர் ஹீரோவாக இருந்துதான் பெயர் வாங்கித் தருகிறார்!

சமீபத்தில் டோனி என்ற ஒரு ஹீரோ வாகட்டும், இன்னும் நினைவில் வரும் எத்தனை எத்தனையோ ஹீரோக்களை நினைத்துப் பாருங்கள். எல்லோரும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையே. நீண்டு நினைவில் நிற்பவர்கள் வெகுசிலர்… அதில் கண்டிப்பாக, கவாஸ்கர், கபில், சச்சின் போன்ற சிலர் மட்டுமே வரக்கூடும்.

posted by சாகரன் @ 6/03/2006 07:10:00 PM   0 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER