சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, June 30, 2004
முயற்சியும் குறை சொல்பவர்களும்..
எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும், அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி! இதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதும், அதை தவிர்ப்பதும் சரிதானா என்று கேட்டால்.. சரியல்ல என்றே சொல்லத்தோன்றும்...

இன்று செய்ய ஆரம்பிக்கும் முயற்சி நாளை எல்லோரும் பாராட்டப்படுவதாக மாறலாம்..! அல்லது அப்படி இல்லாவிட்டாலும் செய்வதைச் செய்து விட்டோம் என்ற ஆத்ம திருப்தியாவது கிடைக்கும்...

வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை.. அல்லது குறைந்த பட்சம் சரியான மதிப்பு கூட தருவதில்லை உலகம்.

இன்று தூக்கி வைத்துக்கொண்டாடும், பாரதிக்கு அவர் வாழ்ந்த காலதில் என்ன மரியாதை கிடைத்தது என்று யோசித்துப்பார்த்தால் அது புரியும்.
posted by சாகரன் @ 6/30/2004 12:54:00 PM   3 comments
Hotmail 250 MB
இணைய இலவச மின்னஞ்சல் தளங்களின் சேமிப்பு அளவு அதிகமாகிக்கொண்டிருப்பது, நீங்கள் அறிந்திருக்கலாம்....

இந்த வாரத்திலிருந்து, HotMailலும் 250 MB தரப்போவதாக செய்திகள் கசிகின்றன!
posted by சாகரன் @ 6/30/2004 11:39:00 AM   0 comments
Tuesday, June 29, 2004
Gmail - The Hot Topic
Gமெயில்! இன்று இணையத்தின் ஹாட் டாபிக் இதுதான்..!!

Gமெயில், RediffMail கூட 1GB கொடுக்கும் போது, ஏன் ஜிமெயில் என்று கேட்டால்,
சில இண்டரஸ்டிங் பதில்கள் வருகின்றன.

ஒன்று , அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இரண்டு மெயில் அட்ரெஸ் நல்லா இருக்கு. மூன்று கான்பரண்ஸ் மாதிரி பேக் அண்ட் போர்த் மெயில்கள் ஒன்றாக பார்க்க முடியும், நான்கு நல்ல இண்டர்பேஸ், ஐந்து வேகமான தளம், ஆறு சீக்கிரமா கிடைச்சா வேணும்கற பேர் செலக்ட் பண்ணிக்கலாம்.

உங்களுக்கும் ஜிமெயில் கிடைக்க வேண்டுமா....

www.gmailswap.com என்ற தளத்திலோ அல்லது, http://www.dfwairwaves.com/forums/ இந்த தளத்திலோ போஸ்ட் செய்யுங்கள்... கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது! சில மணி நேரங்களில் பலர் போஸ்ட் செய்வதை இந்த தளங்களில் நாம் பார்க்க முடியும்.

நீங்கள் விரும்பிய பெயர் முன்னரே எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டதா என்று அறிய வேண்டுமா? இங்கு சுட்டுங்கள்: http://www.gmailster.com/

இனிவிடேஷன் உங்களுக்கு கிடைத்து விட்டதா.. ஆனால் நீங்கள் விரும்பிய பெயர் கிடைக்கவில்லையா? கொஞ்சம் நிதானியுங்கள். சட்டென்று வேறு பெயர் உபயோகித்து விடாதீர்கள்.

பெயர் செலக்ட் செய்வதில் கூட சில விசயங்கள் இருக்கின்றன. "_" அல்லது "-" உபயோகிக்க முடியாது, ஆனால் "." உபயோகிக்கலாம்! அதனால் உங்கள் முழு பெயரை "." உபயோகித்தும் கூட நல்ல பெயர் செலக்ட் செய்ய முடியும்!
நான் அவசரப்பட்டு ஒரு இன்விடேஷன் வேஸ்ட் செய்து விட்டேன்... :-(
posted by சாகரன் @ 6/29/2004 12:48:00 PM   2 comments
இண்டர்வியூ, சில நினைவுகள்...
இன்று ஒருவரை இண்டர்வியூ செய்தேன்.
இண்டர்வியூ என்றவுடன் சில எண்ணங்களும் நினைவுகளும் மனதிலாடுகின்றன.

Interview அட்டெண்ட் செய்வது எப்படி என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா என்று நான் ஏங்கியதுண்டு. அது ஒரு காலம.... கிட்டத்தட்ட எல்லோருக்கும் அந்த காலம் இருந்திருக்கும்...

அந்த காலம்,

கல்லூரி முடித்து, சில கணிணி மென் பொருட்கள் கற்று நான் வேலை தேட ஆரம்பித்திருந்த் நேரம்.
இண்டர்வியூ பற்றி சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். என்ன கேட்கப்படும் என்ன சொல்ல வேண்டும் என்று பேசுவது வழக்கம். என்னோடிருந்த சில நண்பர்களில் முக்கியமாக ஞாபகத்திற்கு வருபவர் கிரீஷ் என்ற நண்பர்.

என்னுடைய முதல் இண்டர்வியூவை சென்னைஆன்லைன்.காம் நிறுவனத்தினருடன். அட்வர்டைஸ்மெண்ட் பார்த்து முதலில் அப்ளை பண்ணி இருந்தேன். அழைத்திருந்தார்கள். எனக்கு உள்ளுக்குள் ஒரு வித நடுக்கம். இது தான் முதல் இண்டர்வியூ, என்ன ஏது என்று தெரியாது, ஏதேனும் இருந்தாலும் தைரியமாக பேசிப்பார்ப்போமே... நடப்பது நடக்கட்டும் என்று தோன்றியது.

சென்னைஆன்லைன் நிறுவனத் தலைவர் அவர்களுடன் பேசினேன். ய்ப்பா.. என்ன அழகாக ஜெண்டிலாக வரவேற்று பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதெல்லாம் நானும் செய்ய வேண்டும் என்றேனும் ஒரு காலம்... ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு தாழ்வு மனப்பான்மை இருந்தது, இப்போதும் நினைவிலாடுகிறது!

அவர்கள் இண்டர்வியூ கேட்டிருந்தது பிரோக்ராமருக்காக இல்லை. டிரைனிங் குடுப்பதற்காகவும், சென்னை ஆன்லைன் மேகஸினை அப் டேட் செய்வதற்காகவும்! அதை தெளிவு படுத்தினார். எனக்கு கொஞ்சம் தயக்கம் வந்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள்.
அப்படி ஆகிவிடுமோ என்று தோன்றியது. பல கணிணி தொடர்பான நண்பர்களுடன் தொடர்பு இருந்ததாலும், எனக்கு இந்த கருத்து இருந்து வந்தது. சரி வந்துவிட்டோம், கடைசி வரை பார்த்து விடலாமே என்று நினனத்தேன்.

அவர், என்னிடம் கேட்ட முக்கியமான கேள்வி,
சென்னைஆன்லைன்.காம் பார்த்திருக்கிறீர்களா? மேகஸின் குறித்து உங்கள் கருத்து என்ன?

அந்தகாலத்தில் நான் தமிழ் குறித்து பெரிதும் அறிந்தவனோ... அல்லது இலக்கிய அறிவு நிறைந்தவனோ அல்ல.. அதனால் நான் சொன்னது.... " ஓ.கே சுமாராக இருக்கிறது, ஆனால் இதெல்லாம் வெற்றி பெரும் என்று நிச்சயம் இல்லை."
பாவம், இப்போதும் கூட அவருடைய அந்த முகவாட்டமும் சுணக்கமும் ஞாபகம் வருகிறது. :-)
ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், டெக்னிகல் இண்டர்வியூ செய்பவரிடம் என்னை அனுப்பினார். டெக்னிகலில் செம சொதப்பல். எய்ம் என்ன, streangth, weakness போன்ற சாதாரண கேள்விகளுக்குக் கூட ஏதோ இஷ்டத்திற்கு பதில் சொல்லி வந்தேன்...

அந்த இண்டர்வியூ ரொம்ப நாள் மனதை பாதித்திருந்தது.

வேறு சில இண்டர்வியூ நினைவுகளும் இப்போது வருகின்றன.

என்னுடைய முதல் இண்டர்வியூ, நான் BSc முடித்து, சும்மா சுத்திக்கொண்டிருந்த நேரத்தில்.... நான் அட்டெண்ட் செய்த அந்த இண்டர்வியூவில், ஒரு வேடிக்கை. அதுவும் பேப்பரில் அட்வர்டைஸ்மெண்ட் பார்த்து அந்த கம்பெனிக்கு போயிருந்தேன். ரிசப்ஷனில் வேற்றுகிரக வாசி போல நான் அமர்ந்திருந்ததை பார்த்து ரிசப்ஷனிஸ்ட், என்ன விசயம் என்று கேட்டார்.
இண்டர்வியூவிற்கு வந்திருப்பதாக சொன்னேன். அப்புறம் தான் அவர் ஒன்று கேட்டார் பாருங்கள், நான் பேந்த பேந்த முழித்தேன்.

அதுதான் CV! என்ன செய்வது கிராமத்திலிருந்து வந்து நகரமாம் சென்னை பட்டணத்தை விழித்து விழித்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, அது பற்றியெல்லாம் அறிவுறுத்தக்கூட நண்பர்கள் கிடைத்திருக்கவில்லை.

ரிசப்ஷனிஸ்ட் சின்ன பெண் வேறு. முதலில் ஒரு நக்கல் பார்வை பார்த்தாலும், முழித்ததை பார்த்து, அவரே ஒரு CV-யை குடுத்து, அது போல ஒன்று எழுதித் தரச்சொன்னார். அதை பார்த்து விட்டு, அவரிடமிருந்தே ஒரு பேப்பர் வாங்கி நான் என் விபரங்களை எழுதிக்கொடுத்தேன். வாங்கிக்கொண்டார்.ஆனால் எனக்கு அவமானமாக இருந்தது. வெயிட் செய்யச்சொன்னார்.. மேனேஜரை பார்க்க இன்னும் நேரம் இருந்தது. மேனேஜரும் வந்திருப்பார்... ஆனால்.... நான் எஸ்கேப் ஆயிருந்தேன். ஏனோ... அதன்பிறகு இண்டர்வியூ என்றால் உள்ளுக்குள் ஒரு தயக்கம் வந்து உட்கார்ந்து கொண்டது.. அப்புறம்.. மேற்படிப்பு படித்து எக்ஸட்ரா.. எக்ஸட்ரா...

posted by சாகரன் @ 6/29/2004 12:28:00 PM   0 comments
Monday, June 28, 2004
தமிழ் குழுக்கள்... என் வலைப்பூ
தமிழில் இன்று பல மன்றங்கள் இயங்குகின்றன். அதில் நான் அறிந்த வரை
அதிகம் பேசப்படும் ஒரு மன்றம், மன்ற மையம் என்று அழைக்கப்படும் forum hub.

அடுத்த படியாக எனக்கு பிடித்த் மன்றம் தமிழ்மன்றம்.tamilmantram.com

பின்னர் அலைகள் மன்றம் என்ற ஒரு மன்றத்தையும் பார்த்தேன். வேறு சில மன்றங்களும் உண்டு.
ஆனால் பெரும்பாலான மற்ற மன்றங்கள் வெகுசில போஸ்டிங்குகளுடன், குறைவான உறுப்பினர்களுடன்
இயங்குகின்றன.

யாஹூ குரூப்ஸ் என்று பார்த்தால் தமிழில் தான் அதிக அளவில் குரூப்கள் என்று எங்கோ படித்தேன்.

அதே போல வலைப்பூக்களிலும் கூட.. தமிழ் தான் அதிகம் ஆட்சிமொழி போல...

இங்கு ஒன்று தோன்றுகிறது. தமிழர்களிடம் குழு மனப்பான்மை என்பது குறைவு என்று எப்போதாவது எனக்குத் தோன்றுவது உண்டு. ஒருவேளை அது உண்மையோ.. அதனால் தான் அவரவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப குரூப்கள் துவங்குவதும்,
வலைப்பூ அமைப்பதிலும் பிசியாக இருக்கிறார்களோ? எது எப்படி இருந்தாலும், தமிழ் இணையத்தில் அதிகம் உலாவுவது
பார்க்க மிகவும் இனிமையாகத் தானே இருக்கிறது ! அது மறுக்க முடியாததாயிற்றே..!!

நான் ஏன் வலைப்பூ ஆரம்பித்தேன்....

இது ஒரு நல்ல கேள்வி...

வலைப்பூக்களில் பல ஜாம்பவான்களும் திறமையான எழுத்தாளர்களும், எழுதிக்கொண்டிருக்கிறார்கள்...

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், நாகூர் ரூமி, பா.ராகவன், என்.சொக்கன் போன்றோர். இன்னும் பலர்...இருக்கலாம்...ஆனால் எனக்குத் தெரியாது, சமீபகாலங்களிலாக மட்டுமே இணையத்தில் இவ்வளவு உலாவும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது... நிச்சயம் எல்லோரையும், தெரிந்து கொள்ள வேண்டும்... சுவையாகவும் சுகமாகவும் நேரம் போக வேண்டுமானால் வலைப்பூக்களை மேயலாம்..!!

சரி மீண்டும் கேள்விக்கு வருவோம்... வலைப்பூ பற்றி சில காலங்களுக்கு முன்னரே அறிந்திருந்தாலும், எழுதவேண்டும் என்ற உந்துதல் இல்லை.. திறமையாக எழுதிக்கொண்டிருக்கும் மற்ற வலைப்பதிவாளர்கள் பார்த்து நம்க்கெங்கே இப்படியெல்லாம் எழுத வரப்போகிறது என்று தோன்றியதுதான் முக்கிய காரணம்!

ஆனால், எல்லோரும் எல்லாமும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை... சும்மா தோன்றுவதை கிறுக்கித்தள்ளினால் என்ன தவறு.. வாய்ப்பிருக்கும் போது, டைரி குறிப்பு போல மனதில் எழும் எண்ணங்களை எழுதி வைத்தால், என்றேனும் நாமே திரும்பிப்பார்க்கும் போது, மனம் கனிய நேரிடலாமே!. என்ன.. யாரேனும் இதையெல்லாம் படித்தால் கிண்டல் செய்யும் வாய்ப்பிருக்கிறது..

நண்பர் முத்து, தமிழ் வலைப்பூக்கள் பட்டியலில் இதை சேர்த்து விடச்சொன்னார்... tamilblogs.blogspot.com ல் இணைத்துவிடச்சொல்லி பின்னூட்டம் கொடுத்து விட்டேன். ஆனாலும் இங்கு வருபவர்களிடம் முதலிலேயே ஒன்று சொல்லிவிட வேண்டும், இது ஒன்றும் திறமையான எழுத்துக்குறிப்புகள் இல்லை. சும்மா.. சும்மா... மட்டும்தான் என்று, எப்படி என்றுதான் தெரியவில்லை.

posted by சாகரன் @ 6/28/2004 05:31:00 PM   2 comments
Publishing Through E-Mail
இ-மெயில் மூலமாக பதிப்பது என்பதைக்கண்டு மிகவும் மகிழ்கிறேன்.
 
எப்படி என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
 
Blogger.com ல் மெயில் மூலமாக நேரடி பதிப்பிற்கு வழி செய்துள்ளார்கள்.
இது உண்மையில் சுலபமான வழி, உங்கள் மெயிலில் HTML formate ல் யூனிகோடு வைத்து நீங்கள் எழுதி, பார்மேட்டிங் முதலியன செய்து அழகாக பதித்து விடலாம். இணையத்திற்கு வந்து தான் பதிக்க வேண்டும் என்பது இல்லை..
 
மேலும் அலுவலகத்திலிருந்தால், வெறும் மெயில் மூலமே பதிக்கலாம் என்பது இன்னும் சுகமானது! இப்போது சிந்தனைக்கு எதுவும் தடை இல்லை!
 

posted by சாகரன் @ 6/28/2004 03:08:00 PM   0 comments
எழுத்தில் என் ஈடுபாடு...
படிப்பதில் எனக்கு ஈடுபாடு அதிகம்.

எழுத்தில் என் ஈடுபாடு... என்ற தலைப்பில் நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள் பற்றிய கருத்துக்களை இங்கு இறக்கி வைக்க முயலுகிறேன்.

இன்று ,

நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும், அம்பை அவர்கள் எழுதிய "சிறகுகள் முறியும்" என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி...


சிறுகதைகள் எழுதுவது என்பது னிச்சயம் திறமைதான். கற்றுக்கொடுத்து அது வருமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு.

ஆனால் கற்றுக்கொள்ளவும் முடியும் என்று மனதில் ஏதோ ஒரு மூலையில் தோன்றாமல் இல்லை. எழுதிப்பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். மனதில் சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தாமல் போகும் எந்த கதைகள் மீதும் எனக்கு பெரும் விருப்பம் இருப்பதில்லை.

இந்த தொகுப்பில் உள்ள சில கதைகள் இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் படித்து விட்டு என் கருத்துக்களையும் பதிந்து வைக்கிறேன்.

(தொடரும்)
posted by சாகரன் @ 6/28/2004 12:00:00 PM   0 comments
கணிணி துறையில் இருப்பவர்களின் நிலை!
கணிணித்துறையில் இன்று என்னைப்போல் பலர் இருக்கிறார்கள்.
நான் கணிணித்துறையை விரும்பி ஏற்க வில்லை. ஆனால் திணிக்கப்பட்ட ஒன்றை ஏற்றுக்கொண்டு முறையாக செயல்பட்டால் வெற்றி னிச்சயம் என்பது எல்லோரும் அறிந்தது தானே..!

சரி, நான் அறிந்த வரை கணிணித்துறையில் இருப்பவர்களின் நிலை என்ன என்பதையும், சவுதி அரேபியாவில் இருக்கும் என் மனதில் தோன்றும் எண்ணங்களையும் இங்கு எழுத்தில் வடிப்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி..

இன்று இந்த துறை மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.

ஜாவா... னான் வேலை பார்க்கும் பிரிவைச் சேர்ந்த ஒரு மென்பொருள்.

ஆரம்பித்த புதிதில், ஜாவாவில் எழுதுபவர்களுக்கு வேலையும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை.
ஜாவா தெரிந்திருக்க வேண்டியது பல வேலைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டு விட்டது.

நான் வேலை பார்க்கும் கம்பெனியில் இன்று எத்தனை எத்தனை பேர்கள் .. ஜாவா தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.. இணையத்தின் மூலம் சேவை எவ்வளவு முக்கியமாகப் போய் விட்டது என்பதைப்பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

இன்றைய புது கணிணியாளர்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் , வேலை தேட வேண்டும் என்றால் என்னென்ன தேவை என்று பட்டியலிட்டால்,

ஜாவா பேசிக். மற்றும், ஜாவா எண்டர்பிரைஸ் இரண்டும் நிச்சயம் தேவை.
முக்கியமாக, வெப்லாஜிக் மற்றும் சில அப்பிளிகேசன் சர்வர்களில் வேலை
பார்த்திருப்பது அவசியம்.

என்னென்ன வேலைகள் என்றால், Jஎஸ்பி, இஜெபி ஆகியன முக்கியம்.

நம்மை நாமே உயர்த்திக்கொள்ள தெளிவு படித்திக்கொள்ள ஒரு சுலபமான வழி இருக்கிறது. அது தான் சர்டிபிகேஷன்.

ஜாவா ப்ரொக்ராமர், ஜாவா வெப் காம்பொனெண்ட் டெவெலபர் மற்றும் ஜாவா பிசினஸ் காம்பொனெண்ட் டெவெலபர் போன்ற சர்டிபிகேஷன் எழுதியிருந்தால் உங்களுக்கும் தன்னம்பிக்கை வரும், வேலை கொடுப்பவர்களுக்கும் நம்பிக்கை வரும் என்று தோன்றுகிறது.

(தொடரும்)
posted by சாகரன் @ 6/28/2004 11:37:00 AM   3 comments
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்காக ஒரு தளம்.
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்காக இணையத்தில் ஒரு தளம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பாலகுமாரன். னெட் என்ற அந்த தளம் திஸ்கி எழுத்துரு வில் இயங்குகிறது.

http://www.balakumaran.net
posted by சாகரன் @ 6/28/2004 11:19:00 AM   0 comments
தமிழில் எழுதுவது இப்போது சரியாக வருகிறது!
கணிணியில் வின்2000ல் இருக்கிறேன். யூனிகோடு முன்பெல்லாம் சரியாகத்தெரியாமல் இருந்தது. இன்று அந்த பிராப்ளம் தீர்ந்தது. கணிணியில் தமிழ் எழுத உதவிய தமிழ் மன்ற நணபர்கள் பாரதி, முத்து அவர்களுக்கு என் நன்றிகள்..
posted by சாகரன் @ 6/28/2004 10:46:00 AM   2 comments
Sunday, June 27, 2004
தமிழ் மன்றத்திற்கு நன்றி...
இன்று தமிழ் மன்றத்தில், திரு.முத்து அவர்களின் வலைப்பூக்கள் பற்றிய பதிவை பார்த்தேன். சரி நாமும் மீண்டும் வலைப்பூ வை தொடர்ந்து எழுதினால் என்ன என்று தோன்றியது. .. தொடர்வது இறை செயல்....



posted by சாகரன் @ 6/27/2004 11:27:00 PM   0 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER